செய்திகள்

உடல்தகுதியை மேம்படுத்த யுவராஜ்சிங் தீவிர பயிற்சி

Published On 2017-11-23 04:14 GMT   |   Update On 2017-11-23 04:14 GMT
உடல்தகுதியுடன் இல்லாததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட யுவராஜ்சிங் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார்.
பெங்களூரு:

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், வீரர்களின் உடல்தகுதி விஷயத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடம் கிடையாது என்பதில் தெளிவாக இருக்கிறது. கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரும் வீரர்களின் உடல்தகுதியில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.

இந்திய மிடில் வரிசை பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் போதிய உடல்தகுதியுடன் இல்லாததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அதாவது ‘யோ-யோ’ எனப்படும் கடுமையான உடற்பயிற்சி சோதனையில் குறிப்பிட்ட புள்ளிகளை எடுத்தால் மட்டுமே அந்த வீரர் உடல்தகுதியுடன் இருக்கிறார் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. இதையடுத்து யுவராஜ்சிங் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார். அவர் ‘யோ-யோ’ சோதனையில் 16.1 புள்ளியை எட்டிவிட்டாலே இலங்கை ஒரு நாள் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அதே சமயம் காயம் அடையாத நிலையில் ரஞ்சி கிரிக்கெட்டை தவிர்த்து உடல்தகுதிக்காக தேசிய அகாடமியில் அவர் பயிற்சி பெறுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 35 வயதான யுவராஜ்சிங் கடைசியாக கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News