செய்திகள்

ஹாக்கி உலக லீக் பைனல்: இந்திய அணியில் இருந்து சர்தார் சிங் நீக்கம்

Published On 2017-11-17 10:35 GMT   |   Update On 2017-11-17 10:35 GMT
ஹாக்கி உலக லீக் பைனல் தொடருக்கான இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் சர்தார் சிங் நீக்கப்பட்டுள்ளார். உடற்தகுதி பெற்ற ருபிந்தர் பால் சிங், பிரேந்த்ரா லக்ரா இடம்பிடித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அடுத்த மாதம் ஹாக்கி உலக லீக் பைனல் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் முன்னணி இடத்தில் இருக்கும் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேல் ரத்னா விருது பெற்ற மூத்த நடுகள வீரர் சர்தார் சிங் நீக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் டாக்காவில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் சர்தார் சிங் இடம்பிடித்திருந்தார். உடற்தகுதிப் பெற்ற ருபிந்தர் பால் சிங், பிரேந்த்ரா லக்ரா ஆகியோருக்கு இடம்கிடைத்துள்ளது.



18 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

கோல் கீப்பர்கள்:- 1. ஆகாஷ் அனில் சிக்தே, 2. சுராஜ் கார்கேரா

தடுப்பாட்டக்காரர்கள்:- 1. ஹர்மன்ப்ரீத் சிங், 2. அமித் ரோஹிதாஸ், 3. டிப்சன் திர்கே, 4. வருண் குமார், 5. ருபிந்தர்பால் சிங், 6. பிரேந்த்ர லக்ரா.

நடுகள வீரர்கள்: 1. மன்ப்ரீத் சிங் (கேப்டன்), 2. சிங்லென்சானா சிங் (துணை-கேப்டன்). 3. எஸ்.கே. உத்தப்பா, 4. சுமித், 5. கோதாஜித் சிங்.


ருபிந்தர் பால் சிங்

முன்கள வீரர்கள்: 1. எஸ்.வி. சுனில், 2. ஆகாஷ்தீப் சிங், 3. மந்தீப் சிங், 4. லலித் குமார் உபாத்யாய், 5. குர்ஜந்த் சிங்.

ஹாக்கி உலக லீக் பைனலில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் இடம்பிடித்துள்ளன.
Tags:    

Similar News