செய்திகள்

நியூசிலாந்து கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Published On 2017-11-07 13:31 GMT   |   Update On 2017-11-07 13:31 GMT
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை 2020 வரை பெற்றுள்ளது ஸ்டார் போர்ட்ஸ் இந்தியா நிறுவனம்.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள், புரோ கபடி, ஜூனியர் கபடி உள்பட ஏராளமான போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளை ஒளிப்பரப்பும் உரிமையை 2020 வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இத்துடன் டிஜிட்டல் உரிமையையும் பெற்றுள்ளது.



இந்த காலக்கட்டத்தில் இந்தியா நியூசிலாந்தில் மூன்று ஒருநாள், 10 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிசம்பர் 1-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை முதன்முதலாக ஒளிபரப்ப இருக்கிறது.
Tags:    

Similar News