செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: குசால் மெண்டிஸ், கவுஷல் சில்வா நீக்கம்

Published On 2017-11-05 15:01 GMT   |   Update On 2017-11-05 15:01 GMT
இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து குசால் மெண்டிஸ், கவுஷல் சில்வா நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடக்கிறது.

முதல் டெஸ்ட் வருகிற 16-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி நாக்பூரில் 24-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி டெல்லியில் டிசம்பர் 2-ந்தேதியும் தொடங்குகிறது.


தசுன் ஷனகா

இதற்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஃபார்ம் இன்றி தவிக்கும் குசால் மெண்டிஸ் மற்றும் கவுஷல் சில்வா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ஆல் ரவுண்டர்கள் தசுன் ஷனகா மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள முன்னாள் கேப்டன் மேத்யூஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.


தனஞ்ஜெயா டி சில்வா

15 பேர் கொண்ட இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தினேஷ் சண்டிமல், 2. திமுத் கருணாரத்னே, 3. தனஞ்ஜெயா டி சில்வா, 4. சதீரா சமரவிக்ரமா, 5. மேத்யூஸ், 6. லஹிரு திரிமன்னே, 7. ரங்கணா ஹெராத், 8. சுரங்கா லக்மல், 9. தில்ருவான் பெரேரா, 10. லஹிரு காமேஜ், 11. சண்டகன், 12. விஷ்வா பெர்னாண்டோ, 13. தசுன் ஷனகா, 14. நிரோஷன் டிக்வெல்லா, 15. ரோஷன் சில்வா.
Tags:    

Similar News