செய்திகள்

அறிமுக வீரர் மொகமது சிராஜ் அடுத்த போட்டியில் சிறப்பாக பந்து வீசுவார்: பும்ரா நம்பிக்கை

Published On 2017-11-05 10:54 GMT   |   Update On 2017-11-05 10:54 GMT
அறிமுக வீரர் மொகமது சிராஜ் கற்றுக்கொண்டு தன்னை சரி செய்து கொள்வதற்கு சற்று நேரம் தேவை என பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து கொலின் முன்ரோவின் சதத்தால் 196 ரன்கள் குவித்தது. பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியாவால் 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியின்போது இந்திய அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜ் அறிமுகமானார். இவர் நான்கு ஓவரில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆறுதலாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றினார்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நான்கு ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். முதல் போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த மொகமது கிராஜ் கற்றுக்கொண்டு தன்னை சரிசெய்து கொள்ள அவருக்கு கொஞ்சம் நேரம் தேவை என பும்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.



மொகமது சிராஜ் குறித்து பும்ரா கூறுகையில் ‘‘மொகமது சிராஜ்-க்கு இது முதல் போட்டி. கடினமாக ஆடுகளத்தில் பந்து வீசுவது மிகவும் கடினம். அவர் அணிக்கு புதிதாக வந்துள்ளார். ஆகவே, பந்து வீச்சாளர்கள் தங்களை சரி செய்து கொள்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். அவர் அதை கற்றுக் கொள்வார்.

பவுலராக உங்களது பந்து வீச்சு அடி வாங்கும்போது, அதிலிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும். ஆகவே, இந்த அனுபவம் அடுத்த போட்டியில் அவரை சிறப்பாக பந்து வீச்சாளராக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News