செய்திகள்

பிசிசிஐ-யின் முன்னாள் ஜெனரல் மானேஜர் எம்.பி ஸ்ரீதர் மாரடைப்பால் காலமானார்

Published On 2017-10-30 11:24 GMT   |   Update On 2017-10-30 11:24 GMT
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் ஜெனரல் மானேஜரும், ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன எம்.வி. ஸ்ரீதர் மாரடைப்பால் காலமானார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயல்பாடு ஜெனரல் மானேஜராக செயல்பட்டு வந்தவர் எம்.வி. ஸ்ரீதர். 51 வயதாகும் இவர் மாரடைப்பால் காலமானார். இவர் ஐதராபாத் அணிக்காக 1988-89 முதல் 1999-2000 வரை விளையாடி 6701 ரன்கள் குவித்துள்ளார். 21 சதங்களுடன் 48.91 சராசரி வைத்துள்ளார். 1993-94-ல் ஆந்திராவிற்கு எதிராக முச்சதமும் அடித்துள்ளார்.



டாக்டர் படித்துள்ள இவர், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2007-08-ல் ஆஸ்திரேலியா இந்தியா வரும்போது இந்திய கிரிக்கெட் அணியின் மானேஜராக செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடருக்கான டைரக்டராகவும் செயல்பட்டுள்ளார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.
Tags:    

Similar News