செய்திகள்
தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு காட்சி.

புரோ கபடி லீக்: குஜராத் அணிக்கு 15-வது வெற்றி

Published On 2017-10-21 02:19 GMT   |   Update On 2017-10-21 02:19 GMT
புரோ கபடி லீக் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 23-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 15-வது வெற்றியை ருசித்தது.
புனே :

12 அணிகள் இடையிலான புரோ கபடி லீக் தொடரில் லீக் சுற்று ஆட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் நேற்றிரவு புனேயில் நடந்த 131-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 20-17 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த பெங்கால் வாரியர்ஸ் அணி அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்ட தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-37 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் சமன் செய்தது.



‘பி’ பிரிவில் பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், உத்தரபிரதேச யோத்தா அணிகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்து பிளே-சுற்றுக்குள் நுழைந்தது. அந்த பிரிவில் பெங்களூரு புல்ஸ் 4-வது இடத்தையும், தெலுங்கு டைட்டன்ஸ் 5-வது இடத்தையும், தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடத்தையும் பெற்று வெளியேறியது.

கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 23-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 15-வது வெற்றியை ருசித்தது. ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தன.

Tags:    

Similar News