செய்திகள்

முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர ஷேவாக் 39-வது பிறந்தநாள்: வீரர்கள் டுவிட்டரில் வாழ்த்து

Published On 2017-10-20 05:42 GMT   |   Update On 2017-10-20 05:42 GMT
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி தொடக்க பேட்ஸ்மேனான வீரேந்திர ஷேவாக் தனது 39-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு வீரர்கள் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர ஷேவாக் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று காலை முதல் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அனில் கும்ளே, பார்த்தீவ் பட்டேல், முகமத் ஷமி, கிறிஸ் கெய்ல் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர்.

அவர்களுக்கு ஷேவாக் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இன்னும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்திய கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டக்காரரான ஷேவாக் 2015-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

Tags:    

Similar News