செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா- தென்கொரியா ஆட்டம் டிரா

Published On 2017-10-19 10:08 GMT   |   Update On 2017-10-19 10:09 GMT
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் 3 சுற்றில் இந்தியா - கொரியா ஆட்டம் டிராவில் முடிந்தது.

10-வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது

நேற்று நடந்த ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

41-வது நிமிடத்தில் தென்கொரியா வீரர் ஜங்ஜுன் கோல் அடித்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் குர்ஜந்த் சிங் பதில் கோல் அடித்து இந்தியாவின் தோல்வியை தவிர்த்து ‘டிரா’ செய்தார்.

இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் மலேசியாவை நாளை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

Tags:    

Similar News