செய்திகள்

பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் குவிப்பு

Published On 2017-10-19 09:07 GMT   |   Update On 2017-10-19 09:07 GMT
இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் டெய்லர், லாதம் சதத்தால் நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்குமுன் நியூசிலாந்து அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான முதல் போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது. இந்நிலையில் 2-வது ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.



டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கப்தில் (32), கொலின் முன்றோ (26), கேன் வில்லியம்சன் (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும், அதன்பின் வந்த டெய்லர், லாதம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இருவரும் சதம் அடித்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்கள். இவர்கள் சதத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்தது. டெய்லர் 102 ரன்னும், லாதம் 108 ரன்னும் சேர்த்தனர். இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணி சார்பில் உனத்கட் 10 ஓவரில் 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



பின்னர் 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணி பேட்டிங் செய்து வருகிறது. 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News