செய்திகள்

ஐ.சி.சி. தரவரிசை: பெண்கள் கிரிக்கெட் அணி 4-வது இடத்தில் நீடிப்பு; இங்கிலாந்து முதலிடம்

Published On 2017-10-03 10:43 GMT   |   Update On 2017-10-03 10:43 GMT
ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 4-வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட்டின் தர வரிசையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது. புள்ளிகள் அடிப்படையில் இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

128.47 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதல் இடத்தில் உள்ளது. 128.43 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான வித்தியாசம் 0.4 சதவீதம் மட்டுமே. 118 புள்ளிகளுடன் நியூசிலாந்து 3-வது இடத்தில் உள்ளது. 116 புள்ளிகளுடன் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.



101 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் 5-வது இடத்திலும், 93 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும், 72 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 7-வது இடத்திலும், 67 புள்ளிகளுடன் இலங்கை 8-வது இடத்திலும், 37 புள்ளிகளுடன் வங்காள தேசம் 9-வது இடத்திலும், 30 புள்ளிகளுடன் அயர்லாந்து 10-வது இடத்திலும் உள்ளது.
Tags:    

Similar News