செய்திகள்

1,200 பேர் பங்கேற்கும் தேசிய ஓபன் தடகளம் சென்னையில் 25-ந்தேதி தொடக்கம்

Published On 2017-09-23 09:14 GMT   |   Update On 2017-09-23 09:14 GMT
1,200 பேர் பங்கேற்கும் தேசிய ஓபன் தடகள சாம்பியன் ஷிப் 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 4 நாட்கள் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
சென்னை:

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57-வது தேசிய ஓபன் தடகள ‘சாம்பியன் ஷிப்’ சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டி வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 28-ந்தேதி வரை 4 நாட்கள் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்கள், துறைகளை சேர்ந்த 1,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தில் இருந்து 41 வீரர்களும், 35 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 76 பேர் பங்கேற்கிறார்கள்.

மொத்தம் 47 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஆர்.எஸ்.பி. சர்வதேச நிறுவனம் (துபாய்), அரைஸ் ஸ்டீல் மற்றும் அரைஸ் பவுண்டேசன், கே.ஆர்.ஜி. கோல்டன் ஸ்கை (துபாய்), சன்பீம் பள்ளிகள் ஆகியவை ஆதரவுடன் இந்தப்போட்டி நடக்கிறது.

25-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு ஜி.எஸ்.டி மற்றும் கலால் துறை பிரின்சிபல் தலைமை கமி‌ஷனர் சி.பி.ராவ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீதா ஹரீஷ் தாக்கூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ ஐ.தேவாரம், பொருளாளர் சி.லதா ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News