செய்திகள்

2024 ஒலிம்பிக் போட்டி பாரீசில் நடக்கிறது

Published On 2017-09-14 07:44 GMT   |   Update On 2017-09-14 08:52 GMT
2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்துவது என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ஒருமனதாக தேர்வு செய்தது.
லிமா(பெரு):

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

கடைசியாக கடந்த ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் நடந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி (2020) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.

2014 மற்றும் 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை எந்த நகரில் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான 131 வது ஐ.ஓ.சி. (சர்வதேச ஒலிம்பிக் கழவுன்சில்) கூட்டம் நேற்று நடந்தது. பெரு தலைநகர் லிமாவில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்துவது என்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதமே இதுபற்றி முடிவு மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1900, 1924 ஆண்டுகளில் நடைபெற்றது. தற்போது 100 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது.

2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்சில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஒருமனதாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

லாஸ்ஏஞ்சல்சில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பது இது 3-வது தடவையாகும். இதற்கு முன்பு 1932, 1984-ம் ஆண்டுகளில் ஜனவரி ஒலிம்பிக் போட்டி நடந்தது.
Tags:    

Similar News