செய்திகள்

இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஜோர்டு மரினே நியமனம்

Published On 2017-09-08 12:42 GMT   |   Update On 2017-09-08 12:42 GMT
இந்திய ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோர்டு மரினே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜோர்டு மரினே இந்திய ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பையை வென்ற ஜூனியர் அணியின் பயிற்சியாளராக இருந்த ஹரேந்திர சிங் உயர் செயல்திறன் சிறப்பு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



தற்போது மரினே பெண்கள் அணியுடன் சென்றிருப்பதால் வருகிற 20-ந்தேதி பொறுப்பேற்கிறார். இந்த அறிவிப்பை புதிய விளையாட்டுத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்யவர்தன் சிங் ரதோர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News