செய்திகள்

பவுன்சர் பந்து தாக்கியதில் பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

Published On 2017-08-16 11:48 GMT   |   Update On 2017-08-16 11:48 GMT
பாகிஸ்தானின் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இஸ்லமாபாத்:

பாகிஸ்தானின் கிளப் அணியில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, மர்தானில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி விளையாடியபோது பவுன்சர் பந்து அவரது தலையில் தாக்கியது. பேட்டிங் செய்தபோது அவர் ஹெல்மெட் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

ஜூபைர் அகமது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது. ஜுபைர் அகமது குவெட்டா பியர்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் பிலிப் ஹூக்ஸ் உள்ளூர் போட்டியின் போது, பவுன்சர் பந்து பின்கழுத்து பகுதியில் தாக்கியதில் மைதானத்திலேயே நினைவு இழந்து சுருண்டு விழுந்து இறந்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News