செய்திகள்

சீன கிளப்பில் விளையாடும் பிரேசில் வீரர் பாலினோவை வாங்குகிறது பார்சிலோனா

Published On 2017-08-15 12:27 GMT   |   Update On 2017-08-15 12:27 GMT
ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா, சீனாவின் குவாங்சோயூ எவர்கிராண்ட் கிளப்பில் விளையாடும் பாலினோவை வாங்குகிறது.
பார்சிலோனா அணியில் இடம்பிடித்திருந்த நெய்மர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக சென்றுள்ளார். பார்சிலோனா அணி ஏற்கனவே ஜெரார்டு டியுலேபெயு, நெல்சன் செமெடோ ஆகியோரை ஒப்பந்தம் செய்திருந்தது.

நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான போட்டியில் பார்சிலோனா 1-3 என தோல்வியடைந்தது. வருகிற 31-ந்தேதிக்குள் டிரான்ஸ்பர் தொடர்பான வேலைகளை முடிக்க வேண்டும்.

இந்நிலையில் சீனாவில் உள்ள குவாங்சோயூ எவர்கிராண்ட் அணிக்காக விளையாடி வரும் பிரேசில் நாட்டின் 29 வயதான பாலினோவை வாங்க விருப்பம் தெரிவித்தது.

இதுகுறித்து சீன கிளப்பிடம் பார்சிலோனா பேசியது. அப்போது 40 மில்லியன் யூரோவிற்கு பாலினோவை கொடுக்க சீன கிளப் சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
Tags:    

Similar News