செய்திகள்

பல்லேகலே டெஸ்ட்: முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் குவிப்பு

Published On 2017-08-12 07:26 GMT   |   Update On 2017-08-12 07:26 GMT
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் குவித்துள்ளது.
பல்லேகலே:

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் போட்டியில் 304 ரன் வித்தியாசத்திலும், கொழும்பில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பலலேகலேயில் இன்று தொடங்கியது.

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சஸ்பெண்டு காரணமாக விளையாட முடியாத ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். அவருக்கு இது 2-வது டெஸ்ட் ஆகும்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்டில் விளையாடினார். இதில் 4 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

இலங்கை அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஹெராத், நவன்பிரதீப், தனஞ்செயா டிசில்வா ஆகியோருக்கு பதிலாக லக்கு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, லக்சன் சன்டகன் இடம் பெற்றனர்.

இந்திய அணி கேப்டன் வீராட் கோலி ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தவானும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக விளையாடினார்கள். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

முதல்நால் உணவு இடைவேளைவரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 67 ரன்களும், ஷிகார் தவான் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Tags:    

Similar News