செய்திகள்

உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி தேவிந்தர் சிங் கங் சாதனை

Published On 2017-08-11 11:19 GMT   |   Update On 2017-08-11 11:19 GMT
லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டு எறிதல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தேவிந்தர் சிங் கங் சாதனைப் படைத்துள்ளார்.
லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்று நாளை நடக்கிறது. இதற்கான தகுதிச் சுற்று நேற்று நடைபெற்றது.

இதில் இந்தியா சார்பில் தேவிந்தர் சிங் கங் குரூப் ‘பி’ தகுதிச் சுற்று ரவுண்டில் கலந்து கொண்டார். அப்போது 3-வது வாய்ப்பில் 83 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதனால் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார் (83 மீட்டர் தூரத்திற்கு மேல் எறியும் வீரர்கள் அடுத்தச்சுற்றுக்கு முன்னேறும் தகுதி பெற்றவர்கள்). அதன்பின் கடைசி வாய்ப்பில் 84.22 மீட்டர் தூரம் வீசினார்.


இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நீரஜ் சோப்ரா

மற்றொரு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவால் 83 மீட்டர் தூரத்திற்கு மேல் எறிய முடியவில்லை. இதனால் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Tags:    

Similar News