செய்திகள்

தனி நபராக ஓடி 200 மீட்டர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஐசக் மக்வாலா

Published On 2017-08-10 13:02 GMT   |   Update On 2017-08-10 13:02 GMT
போட்ஸ்வானா நாட்டை சேர்ந்த ஐசக் மக்வாலா என்ற ஓட்டப்பந்தய வீரர் தனிநபராக ஓடி 200 மீட்டர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயந்தில் கலந்து கொள்ள போட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்த ஐசக் மக்வாலா தகுதிப் பெற்றிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மக்வாலாவிற்கு தடைவிதிக்கப்பட்டது. அவருக்கு தொற்றுநோய் உள்ளது. இதனால் 48 மணி நேரம் தனிமைப்படுத்தப்படுவார் என்று சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்தது.



அதன்படி 200 மீட்டர் தகுதிச் சுற்றில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் 400 மீட்டர் இறுதிப் போட்டியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் வான் நிகெர்க்கிற்கு மக்வாலா கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக மக்வாலா 400 மீட்டர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

இந்நிலையில் அவரது 48 மணி நேரக் கெடு முடிவடைந்ததால் மீண்டும் ஓடுவதற்கு தகுதிப் பெற்றார். இதனால் நேற்று அரையிறுதிக்கு தகுதி பெற அவர் தனியாக ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனியாக ஓடிய மக்வாலா 20.20 நிமிடத்திற்குள் பந்தய தூரத்தைக் கடந்து அரையிறுதிக்கு வாய்ப்பை பெற்றார். பின்னர், அரையிறுதியில் 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Tags:    

Similar News