செய்திகள்

டிக்கெட் விற்பனையில் சாதனைப் படைக்க இருக்கும் லண்டன் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடர்

Published On 2017-07-30 10:38 GMT   |   Update On 2017-07-30 10:38 GMT
லண்டனில் அடுத்த வாரம் தொடங்க இருக்கும் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடர், அதிக டிக்கெட்டுக்கள் விற்பனை செய்தததில் சாதனை படைக்க இருக்கிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடர் ஆகஸ்ட் 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த தொடரில் உலகளவில் உள்ள முன்னணி தடகள வீரர்கள் - வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார். இதுதான் அவருடைய கடைசி ஓட்டமாகும். இந்த தொடருடன் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்.



இந்த தொடரை நேரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் டிக்கெட்டுக்களை முன்பதி செய்து வருகின்றனர். தற்போது வரை 6 லட்சத்து 60 ஆயிரம் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உலக சாம்பியன்ஷிப் தடகள தொடரில் அதிக டிக்கெட்டுக்கள் விற்பனை ஆகியது இதுதான் முதன்முறை.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டில் பெர்லின் நகரில் நடைபெற்ற தொடரை பார்ப்பதற்காக 4 லட்சத்து 17 ஆயிரத்து 156 டிக்கெட்டுக்கள் விற்பனை ஆனதே சாதனையாக இருந்தது. இந்த சாதனை முறியடிக்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News