செய்திகள்

உலகக் கோப்பையில் 171 ரன்கள் குவித்த கவுர் தரவரிசையில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்தல்

Published On 2017-07-25 16:02 GMT   |   Update On 2017-07-25 16:02 GMT
உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 171 ரன்கள் குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர், வீராங்கனைகள் தரவரிசையில் முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பையில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக கேப்டன் மிதாலி ராஜ், துணை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். இவர்கள் ஆட்டத்தை பார்க்கும்போது ஆண்கள் கிரிக்கெட்டை பார்த்ததுபோன்று இருந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 115 பந்தில் 20 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 171 ரன்கள் குவித்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற ஹர்மன்ப்ரீத் முக்கிய காரணமாக இருந்தார். அத்துடன் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்தார்.



இதன்மூலம் முதன்முறையாக வீராங்கனைகளுக்கான ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் பத்து இடத்திற்குள் முன்னேறியுள்ளார். முந்தைய தரநிலையில் இருந்து 7 இடங்கள் முன்னேறி தற்போது 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

மிதாலி ராஜ் 2-வது இடத்தில் உள்ளார். 10 புள்ளிகள் அதிகம் பெற்று ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லெனிங் முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் எலிஸ் பெரி 3-வது இடத்தில் உள்ளார். பூனம் ரவுத் ஐந்து இடங்கள் முன்னேறி 14-வது இடத்தில் உள்ளார். இவர் இறுதிப் போட்டியில் 86 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News