செய்திகள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: இங்கிலாந்து 33 ஓவரில் 133/3

Published On 2017-07-23 11:33 GMT   |   Update On 2017-07-23 11:33 GMT
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனைகள் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் பெண்கள் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வின்பீல்டு, பியுமோன்ட் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள்.

இந்திய வீராங்கனைகளில் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு இருவரும் விளையாடினார்கள். அதிரடியாக விளையாட முடியாவிட்டாலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது.

12-வது ஓவரை கயாக்வார்டு வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் வின்பீல்டு அவுட் ஆனார். அவர் 24 ரன்கள் சேர்த்தார். அடுத்து சாரா டெய்லர் களம் இறங்கினார். 15-வது ஓவரை பூனம் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பியுமோன்ட் ஆட்டம் இழந்தார். இவர் 23 ரன்னில் வெளியேறினார்.



அடுத்து 3-வது விக்கெட்டுக்கு டெய்லர் உடன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்தார். நைட் 1 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். முதல் 10 ஓவரில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்து தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால், சற்று தடுமாற்றம் அடைந்தது.

அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு டெய்லர் உடன் ஸ்சிவர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமா விளையாடி ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார்கள்.

தற்போது 30 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்சிவர் 39 ரன்னுடனும், டெய்லர் 39 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
Tags:    

Similar News