செய்திகள்

இலங்கை வீரர் எரங்கா பந்து வீச்சுக்கு அனுமதி: ஐ.சி.சி.

Published On 2017-07-20 02:22 GMT   |   Update On 2017-07-20 02:22 GMT
இலங்கை வீரர் ஷமிந்தா எரங்கா பந்து வீசுகையில் அவரது முழங்கை 15 டிகிரியை விட அதிகமாக வளைவதாக நடுவர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து அவர் மீண்டும் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்தா எரங்கா பந்து வீசுகையில் அவரது முழங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அனுமதித்த 15 டிகிரியை விட அதிகமாக வளைவதாக நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது பந்து வீச்சுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சென்னையில் உள்ள ஐ.சி.சி. அங்கீகாரம் பெற்ற பந்து வீச்சு பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. இதில் அவர் தனது பந்து வீச்சு முறையை திருத்தி கொண்டார். இதனை அடுத்து எரங்கா மீண்டும் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது. 
Tags:    

Similar News