செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 335 ரன்னில் ஆல்அவுட்

Published On 2017-07-15 14:11 GMT   |   Update On 2017-07-15 14:11 GMT
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 335 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகியுள்ளது.
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் அம்லா (78), டி காக் (68), பிளாண்டர் (54) ஆகியோரின் அரைசதங்களால் முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்திருந்தது. பிளாண்டர் 54 ரன்னுடனும், கிறிஸ் மோரிஸ் 23 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


அரைசதம் அடித்த பிளாண்டர்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிளாண்டர் நேற்றைய 54 ரன்னிலேயே ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். கிறிஸ் மோரிஸ் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த மகாராஜ் (0), மோர்கல் (8) அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 335 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 6.2 ஓவர்கள் மட்டுமே விளையாடி 26 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து அல்அவுட் ஆனது. இந்த நான்கு விக்கெட்டுக்களையும் ஆண்டர்சன் வீழ்த்தி அசத்தினார்.


3 விக்கெட் வீழ்த்திய பிராட்

முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 72 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பிராட் மூன்று விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.


2 விக்கெட் வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ்

குக் 3 ரன்னிலும், ஜென்னிங்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தார். ஜோ ரூட் 43 பந்தில் 52 ரன்கள் எடுத்தும், பேலன்ஸ் 36 பந்தில் 27 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

பின்னர் தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் 78 ரன்னிலும், பேலன்ஸ் 27 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
Tags:    

Similar News