செய்திகள்

சீனாவின் முன்னணி நீச்சல் வீரர் நிங் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறவில்லை

Published On 2017-06-27 13:56 GMT   |   Update On 2017-06-27 13:56 GMT
சீனாவின் முன்னணி நீச்சல் வீரர் நிங் செடாயோ 100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.
சீனாவின் தலைசிறந்த நீச்சல் வீரராக உருவாகி வருபவர் நிங் செடாயோ. 24 வயதான இவர் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் 100 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் தங்க பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.

ஹங்கேரியில் ஜூலை 14-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டியில் தகுதிச் சுற்றுக்கான நேரத்திற்குள் பந்தய தூரத்தை நீந்தவில்லை. இதனால் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இழந்துள்ளார்.
Tags:    

Similar News