செய்திகள்

விராட் கோலி காரணமின்றி குறிவைத்து தாக்கப்படுகிறார்: அனுராக் தாகூர்

Published On 2017-06-25 11:24 GMT   |   Update On 2017-06-25 11:24 GMT
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி எந்தவித காரணமின்றி குறிவைத்து தாக்கப்படுகிறார் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இவருக்கும் விராட் கோலிக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை என்று கூறப்பட்டது. இதை உறுதி செய்த கும்ப்ளே, தனது பதவியில் இருந்து விலகினார்.

கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகியதற்கு விராட் கோலிதான் காரணம் என்று விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது. சில முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் நேரடியாக தாக்குதல் நடத்துகிறார்கள்.

இந்நிலையில் விராட் கோலி மீது எந்தவித காரணமின்றி குறிவைத்து தாக்குகிறார்கள் என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.



இதுகுறித்து அனுராக் தாகூர் கூறுகையில் ‘‘விராட் கோலி காரணம் ஏதுமின்றி குறிவைத்து தாக்கப்படுகிறார். இந்த விவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அடுத்த 10 வருடத்திற்கு இந்திய அணியை முன்னணிக்கு கொண்டு செல்லும் திறமை படைத்தவர் விராட் கோலி. கிரிக்கெட் வீரர்கள் குறிவைத்து தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் கேப்டன்கள் மற்றும் முன்னாள் கேப்டனகள் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News