செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் ஒருநாள்: இந்தியா பேட்டிங்- குல்தீப் யாதவ் அறிமுகம்

Published On 2017-06-23 13:00 GMT   |   Update On 2017-06-23 13:00 GMT
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பின்னர், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்றிரவு 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்குப் பதிலாக ரகானேவும், ஜடேஜாவிற்குப் பதிலாக குல்தீப் யாதவும், பும்ப்ராவிற்குப் பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர். குல்தீப் யாதவிற்கு இதுதான் ஒருநாள் கிரிக்கெட்டின் அறிமுக போட்டியாகும்.



இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரகானே, 2. தவான், 3. விராட் கோலி, 4. யுவராஜ் சிங், 5. டோனி, 6. கேதர் ஜாதவ், 7. ஹர்திக் பாண்டியா, 8. அஸ்வின், 9. புவனேஸ்வர் குமார், 10. உமேஷ் யாதவ். 11. குல்தீப் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. லெவிஸ், 2. பொவேல், 3. ஹோப், 4. மொகமது, 5. சேஸ், 6. கார்ட்டர், 7. ஹோல்டர், 8. நர்ஸ், 9. பிஷூ, 10. ஜோசப், 11. கம்மின்ஸ்.
Tags:    

Similar News