செய்திகள்

தனது மகன்களுடன் நேரத்தை செலவழித்த டோனி, கோலி, யுவராஜ்-க்கு நன்றி தெரிவித்த அசார் அலி

Published On 2017-06-20 13:44 GMT   |   Update On 2017-06-20 13:44 GMT
தனது மகன்களுடன் தங்களது நேரத்தை செலவழித்த டோனி, விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு பாகிஸ்தான் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கும்போது ரசிகர்களும் தங்களை எதிரிகளாக நினைத்துக் கொள்வார்கள். வீரர்களும் எதிராக நினைத்துக் கொள்வார்கள். போட்டியின் முடிவைப் பொறுத்து ரசிகர்களால் வன்முறையிலும், வீரர்களுக்க எதிராக கோஷம் எழுப்பும் சம்பவமும் நடைபெறுவதுண்டு. வீரர்கள் மைதானத்தில் ஸ்லெட்ஜிங் செய்வது அதிக அளவில் நடைபெறும். ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே செல்லும்.

ஆனால், தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு அணிகளும் இரண்டு முறை மோதினார்கள். கிரிக்கெட் ஆட்டத்திற்கு வெளியே அவர்கள் சிரித்து சகஜமாக பேசிக் கொண்டார்கள்.

இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பின், விராட் கோலி, யுவராஜ் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் அசார் மெஹ்மூத் உடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த வீடியோ வெளியானது. போட்டிக்கு முன் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் கான் மகனை டோனி கையில் வைத்துக் கொண்டு கொஞ்சினார்.



தற்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலி, தனது டுவிட்டர் பக்கத்தில் மூன்று படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனும் ஆன டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அசார் அலி மகன்களுடன் உள்ளனர்.

அந்த படத்திற்குக் கீழ் ‘‘எனது மகன்களுடன் நேரத்தை செலவழித்த மூவருக்கும் நன்றி, எனது மகன்கள் மிகவும் சந்தோசம் அடைந்தனர்’’ என்று பதிவிட்டுள்ளார்.



இதன்மூலம் வீரர்கள் மைதானத்திற்கு வெளியே தங்களது நட்பு ரீதியை வளர்த்துக் கொண்டு வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News