செய்திகள்

15 வருடங்களுக்குப் பிறகு இலங்கை மண்ணில் ஜிம்பாப்வே விளையாடுகிறது

Published On 2017-06-17 11:14 GMT   |   Update On 2017-06-17 11:14 GMT
15 வருடங்களுக்குப் பிறகு இலங்கை சென்று ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடர் மற்றும் ஒரெயொரு டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி விளையாடுகிறது.
ஜிம்பாப்வே அணி 15 வருடங்களுக்குப் பிறகு இலங்கை சென்று கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும், ஒரேயொரு டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிறது.

ஒருநாள் போட்டி ஜூன் 30-ந்தேதி தொடங்கி, ஜூலை 10-ந்தேதி முடிவடைகிறது. இந்த ஐந்து போட்டிகளும் காலே, ஹம்பன்தோடாவில் நடக்கிறது.

ஜூலை 14-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டி கொழும்பில் நடக்கிறது. காலே மைதானத்தில் 17 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. இதற்கு முன் கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை விளையாடியிருந்தது.
Tags:    

Similar News