செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகிறார் நஜம் சேதி

Published On 2017-05-26 10:13 GMT   |   Update On 2017-05-26 10:13 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் ஷகாரியார் கானின் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து நஜம் சேதி தலைவராகிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வருபவர் ஷகாரியார் கான். இவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இவர் வயது மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதன்பின் பதவி வகிக்கப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான தலைவர் நஜம் சேதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.



மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு வழங்கும் மதிப்பிற்குரிய செயல்திறன் விருதுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆண்டு பொதுக்கூட்டத்தில் நஜம் சேதியை ஒருமனதாக தேர்வு செய்த அதே நேரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புரவலரான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மாற்று நபரை தேடிவருவதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News