செய்திகள்

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராகிறார் முரளீதரன்

Published On 2017-05-25 14:25 GMT   |   Update On 2017-05-25 14:25 GMT
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளீதரன் நியமிக்கப்பட உள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் கடந்த வருடம் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இந்த தொடருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

இந்த வருடம் ஜூலை மாதம் இந்த தொடர் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் இடம்பிடித்துள்ள அணிகளில் வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் அணியும் ஒன்று. இந்த அணி இலங்கை அணியின் ஜாம்பவான் முத்தையா முரளீதரனை ஆலோசகராக நியமிக்கப்பட இருக்கிறது.



இதுகுறித்து அந்த அணியின் உரிமையாளரும், முன்னாள் இந்திய அணி வீரரும், அணித் தேர்வாளருமான வி.பி. சந்திரசேகர் கூறுகையில் ‘‘முரளீதரன் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுவார். முரளீதரனை ஆலோசகராக நியமிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கனவு கண்டதும் கிடையாது. திட்டமிட்டதும் கிடையாது.



வீரர்களை வழிநடத்திச் செல்ல அனுபவமான வீரர் ஒருவர் எங்கள் அணிக்கு தேவைப்பட்டது. முத்தையா முரளீதரன் கிரிக்கெட்டில் அதிக திறனைப் பெற்றவர். அவர் இதை சரியாக செய்வார் என்று நாங்கள் நினைத்தோம். தொடர் முழுவதும் அவர் அணியுடன் இணைந்து இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் மாநில லீக்கில் ஆலோசகராக ஒத்துக்கொள்வது சிறப்பானது’’ என்றார்.
Tags:    

Similar News