search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு பிரிமீயர் லீக்"

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் வெளிமாநில வீரர்களை சேர்க்க அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.#TNPL #OutsidePlayersInTNPL
    புதுடெல்லி:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது சீசன் போட்டி இன்று தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக்சூப்பர் கில்லீஸ், முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த தொடரில் இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2 வீரர்களை சேர்த்துக்கொள்ள கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்திருந்தது. இதற்கு பிசிசிஐ நிர்வாகக் குழு எதிர்ப்பு தெரிவித்ததுடன், வெளிமாநில வீரர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை.


    இந்த முடிவை எதிர்த்து டிஎன்பிஎல் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிமாநில கிரிக்கெட் சங்கங்களில் இடம்பெற்றுள்ள வீரர்கள், அந்தந்த சங்கங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கொடுத்தால் டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று டிஎன்பிஎல் வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு பிசிசிஐ வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், டிஎன்பிஎல் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை சேர்க்க அனுமதி அளிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். #TNPL #OutsidePlayersInTNPL
    ×