செய்திகள்

ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கான தேசிய பயிற்சி முகாம் பெங்களூரில் தொடங்கியது

Published On 2017-05-24 11:14 GMT   |   Update On 2017-05-24 11:14 GMT
ஜூனியர் ஹாக்கி வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில் இங்கு பயிற்சி பெற உள்ளனர்.
புதுடெல்லி:

ஜூனியர் ஹாக்கி வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில் இங்கு பயிற்சி பெற உள்ளனர்.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் வரும் 2020ம் ஆண்டு நடைபெற உள்ளது. ஆண், பெண் என இரு பிரிவுகளில் நடத்தப்படும் இந்த தொடருக்கு வலுவான இந்திய அணிகளை உருவாக்கும் பணியை ஹாக்கி இந்தியா தொடங்கி உள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள மாநில சங்கங்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

அதில், 53 ஜூனியர் வீரர்கள், 37 ஜூனியர் வீராங்கனைகள் கொண்ட பட்டியல் இன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான பயிற்சி முகாம் பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மையத்தில் இன்று தொடங்கியது. 5 வாரம் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

2016-ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News