செய்திகள்

ஐ.பி.எல்.: 10 சீசனில் 7-வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கும் டோனி

Published On 2017-05-21 05:42 GMT   |   Update On 2017-05-21 05:42 GMT
ஐ.பி.எல். தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 10 சீசனில் 7-வது முறையாக இறுதிப் போட்டியில் களம் இறங்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்திய பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) டி20 கிரிகெட் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரில் இருந்தே இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்த டோனி தொடர்ந்து 2016-ம் ஆண்டு வரை கேப்டனாக இருந்தார்.

2008-ல் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவற விட்டது.

2009-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.

2010-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.



2011-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

2012-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியடைந்து ஹாட்ரிட் சாதனையை தவறவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

2013-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.

2015-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

2016-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.



2008 முதல் 2016 வரை 9 சீசனுக்கு ஐ.பி.எல். அணியின் கேப்டனாக டோனி பணியாற்றியுள்ளார். இதில் 2009, 2014 மற்றும் 2016-ம் ஆண்டு மட்டுமே டோனி தலைமையிலான அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. மற்ற 6 முறை முன்னேறியுள்ளது.

தற்போது டோனி இடம்பிடித்துள்ள அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் டோனி கேப்டனாக இல்லை. என்றாலும் 10 சீசனில் 7-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார் டோனி.
Tags:    

Similar News