செய்திகள்

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதியில் போராடி தோல்வி

Published On 2017-04-28 14:58 GMT   |   Update On 2017-04-28 14:58 GMT
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து போராடி தோல்வியடைந்தார்.
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற்ற காலிறுதியில் பி.வி. சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியாவோ-ஐ எதிர்கொண்டார். சொந்த மண்ணில் தெம்புடன் விளையாடிய ஹி பிங்ஜியாவோ-ஐ சிந்து திறமையாக எதிர்கொண்டார். இதனால் முதல் செட்டை 21-15 என எளிதில் கைப்பற்றினார்.

ஆனால் ஹி பிங்ஜியாவோ 2-வது செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 11-7 என பின்தங்கிய சிந்து, இறுதியில் 14-21 என 2-வது செட்டை இழந்தார்.

இதனால் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய 3-வது செட்டில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் மாறிமாறி புள்ளிகள் எடுக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 7-9 என பின்தங்கிய நிலையில் இருந்து சிந்து, பின்னர் 12-12 என சமநிலைப் பெற்றார். பின்னர் 20-20 என சமநிலையை எட்டியது.

21-21 என இருந்த நிலையில் ஹி பிங்ஜியாவோ 24-22 என சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றார். கடும் போராட்டத்திற்குப்பின் பிவி சிந்து தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
Tags:    

Similar News