செய்திகள்

ஆசிய கிராண்ட் பிரிக்சில் வெள்ளி: உலக சாம்பயின்ஷிப் தொடருக்கு தகுதிப்பெற்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா

Published On 2017-04-27 16:40 GMT   |   Update On 2017-04-27 16:40 GMT
சீனாவில் நடைபெற்ற ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.
சீனாவில் உள்ள ஜியாசிங்கில் ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலுக்கான போட்டியின் 2-வது லெக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். அவர், 83.32 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்கு 83 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தாலே போதுமானது. அந்த இலக்கை தாண்டியிருப்பதால் உலக சாம்பயின்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

இப்போட்டியில் சீன தைபேயின் வீரர் சாயோ-டிசுன் செங் 86.92 மீட்டர் தூரம் எறிந்து தங்க பதக்கம் வென்றார். இவர் முதல் லெக்கில் 84.72 மீட்டர் தூரம் வீசி முதல் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

19 வயதாகும் நீரஜ் சோப்ரா, 86.48 மீட்டர் தூரம் எறிந்து ஜூனியர் உலகச் சாதனைப் படைத்ததே அவரது தனிப்பட்ட சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News