செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: 2015-க்குப்பின் மலிங்கா சேர்ப்பு

Published On 2017-04-24 09:57 GMT   |   Update On 2017-04-24 11:01 GMT
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஏற்கனவே, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வங்காள தேசம், நியூசிலாந்து போன்ற அணிகள் வீரர்களை பெயர்களை அறிவித்துவிட்டது.

இந்நிலையில் இன்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தங்களது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் யார்க்கர் மன்னன் லசித் மலிங்காவிற்கு இடம்கிடைத்துள்ளது.

மலிங்கா கடைசியாக 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினா்ர. கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்தார். அதன்பின் ஆஸ்திரேலியா தொடரின்போது அணிக்கு திரும்பினார்.

மலிங்கா 10 ஓவர்கள் வீசி, நீண்ட நேரம் பீல்டிங் செய்ய முடியாததால் ஒருநாள் போட்டியில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது அவர் 10 ஓவர்கள் வீசும் அளவிற்கு உடற்தகுதி பெற்றதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மேத்யூஸ் (கேப்டன்), 2. உபுல் தரங்கா (துணை கேப்டன்), 3. டிக்வெல்லா, 4. குசால் பெரேரா, 5. குசால் மெண்டிஸ், 6. சமரா கபுகேதரா, 7. அசேலா குணரத்னே, 8. தினேஷ் சண்டிமல், 9. லசித் மலிங்கா, 10. சுரங்கா லக்மல், 11. நுவான் பிரதீப், 12. நுவான் குலசேகரா, 13. திசாரா பெரேரா, 14. லக்‌ஷ்மண் சண்டகன், 15. சீகுகே பிரசன்னா.

Similar News