செய்திகள்

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர் வாவ்ரிங்காவுடன் மோதல்

Published On 2017-03-19 08:30 GMT   |   Update On 2017-03-19 08:30 GMT
இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர் சக நாட்டை சேர்ந்த வாவ்ரிங்காவை சந்திப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டியன்வெல்ஸ்:

பி.என்.பி.பரிபாஸ் ஒபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள இன்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதன் ஆண்கள் ஒன்றையர் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடந்தன. ஒரு அரையிறுதியில் உலகின் 9-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) பதினேழாவது வரிசையில் இருக்கும் ஜேக்ஷோக் (அமெரிக்கா) மோதினார்கள். இதில் பெடரர் 6-1, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

35 வயதான பெடரர் 7-வது முறையாக இன்டியன் வெல்ஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி இருக்கிறார். இதில் 4 முறை (2004, 2005, 2006, 2012) பட்டம் வென்றுள்ளார்.



பெடரர் இறுதிப் போட்டியில் சக நாட்டை சேர்ந்த வாவ்ரிங்காவை சந்திக்கிறார். 3-ம் நிலை வீரரான அவர் அரையிறுதியில் ஸ்பெயினை சேர்ந்த கார்னோ பஸ்டாவை 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்றார்.

பெடரர்-வாவ்ரிங்கா மோதும் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் 23-வது முறையாக மோதுகிறார்கள். இதில் பெடரர் 19 தடவையும், வாவ்ரிங்கா 3 முறையும் வென்றுள்ளனர்.

Similar News