செய்திகள்

டோனியின் செல்போன்கள் திருட்டு: டெல்லி போலீசார் வழக்கு

Published On 2017-03-19 07:56 GMT   |   Update On 2017-03-19 07:56 GMT
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் தீவிபத்து நடந்தபோது அவரது 3 செல்போன்கள் திருடு போனது தொடர்ந்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் டோனி. டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் விளையாடி வருகிறார். கேப்டன் பதவியில் இருந்து ஏற்கனவே அவர் விலகி விட்டார்.

டோனி விஜய் ஹசாரே ஒருநாள் பேட்டியில் தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் அணியில் விளையாடினார்.

டோனியின் ஜார்க்கண்ட் அணி நேற்று முன்தினம் டெல்லியில் தங்கி இருந்த துவரகா ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. டோனி மற்றும் ஜார்க்கண்ட் வீரர்கள் 7-வது தளத்தில் இருந்தனர். தீ விபத்தை தொடர்ந்து வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக அரையிறுதி ஆட்டம் நேற்று தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி பெங்காலிடம் தோற்றது.



இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட ஓட்டலில் டோனி தங்கி இருந்த போது அவரது 3 செல்போன்கள் மாயமாகி இருந்தது. அவரது செல்போன்களை யாரோ திருடி சென்றுவிட்டனர்.

தனது 3 செல்போன்கள் திருட்டு போனது தொடர்பாக டெல்லி போலீசில் டோனி புகார் கொடுத்து உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது:-

டோனி ஓட்டல் அறையில் இருந்து காலை உணவு சாப்பிட கீழே சென்றுள்ளார். அப்போது அவரது 3 செல்போன்கள் திருடு போய் உள்ளது என்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டோனியின் செல்போன் திருட்டு போனது தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News