செய்திகள்

இளையோர் உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில், சிலி, பராகுவே இந்தியா வருவது உறுதியானது

Published On 2017-03-17 15:01 GMT   |   Update On 2017-03-17 15:01 GMT
இந்தியாவில் நடைபெற இருக்கும் 17 வயதிற்குபட்பட்டோருக்கான உலக்ககோப்பை கால்பந்து தொடரில் விளையாட பிரேசில், சிலி, பாராகுவே அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை  கால்பந்து தொடர் நடக்கிறது.

இதில் போட்டியை நடத்தும் இந்தியா நேரடியாக தகுதிப் பெற்றுவிடும். மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று அதனடிப்படையில் தகுதி பெறும்.

தற்போது 17 வயதிற்குட்பட்டோருக்கான தென் அமெரிக்கா சாம்பியன்ஷிப் தொடர் சிலியில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டி மீதமிருக்கையில் பிரேசில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சிலி 9 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாராகுவே 8 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், கொலம்பியா 4 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஈகுவடார், வெனிசுலா ஆகிய அணிகள் தலா 1 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.



அதிக புள்ளிகள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள பிரேசில், சிலி, பராகுவே அணிகள் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தகுதிப் பெற்றுள்ளன. கொலம்பியா தனது கடைசி லீக்கில் தோல்வியை சந்திக்காமல் இருந்தால் தகுதி பெற வாய்ப்புள்ளது.

Similar News