செய்திகள்

ஒருநாள் போட்டியில் தொடர்ந்து நான்கு சதம் அடித்து சாதனைப் படைத்த நியூசிலாந்து வீராங்கனை

Published On 2017-02-26 12:53 GMT   |   Update On 2017-02-26 12:53 GMT
நியூசிலாந்தின் கிரிக்கெட் வீராங்கனை எமி சாட்டர்த்வைட் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 275 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனே சரியாக 100 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து. அந்த அணியின் எமி சாட்டர்த்வைட் அவுட்டாகாமல் 102 ரன்கள் எடுத்ததன் மூலம் 49.1 ஓவரில் 276 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.



இந்த சதம் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார் எமி சாட்டர்த்வைட். இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக 137 அவுட்டில்லை, 115 அவுட்டில்லை, 123 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News