செய்திகள்

விஜய் ஹசாரே டிராபி: டோனி தலைமையிலான ஜார்கண்ட் அணி தோல்வி

Published On 2017-02-25 14:59 GMT   |   Update On 2017-02-25 14:59 GMT
விஜய் ஹசாரே டிராபியில் டோனி தலைமையிலான ஜார்கண்ட் அணி கர்நாடகாவிடம் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
மாநில அணிகளுக்கு இடையிலான 50 ஒவர் விஜய் ஹசாரா டிராபி இன்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள டோனி தலைமையிலான ஜார்கண்ட் அணியும், மணீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணியும் மோதின.

டாஸ் வென்ற டோனி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய கர்நாடகா 49.4 ஓவரில் 266 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ரவிக்குமார் சமரத் 71 ரன்னும், கேப்டன் மணீஷ் பாண்டே 77 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜார்கண்ட் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் இஷான் கிஷான் 36 ரன்கள் சேர்த்தார். ஆனால் ஆனந்த் சிங் 1 ரன்னிலும், விராட் சிங் 0 ரன்னிலும், ஜக்கி 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.



அதன்பின் வந்த சவுரப் திவாரி 68 ரன்களும், டோனி 43 ரன்களும் சேர்த்தனர். இவர்கள் இருவரும் அவுட்டான பிறகு ஜார்கண்ட் அணி 49.5 ஓவரில் 261 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் டோனி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மற்ற போட்டிகளில் ஆந்திராவை பெங்கால் அணியும், ரெயில்வேஸ் அணியை பரோடாவும், டெல்லியை தமிழ்நாடும், குஜராத்தை மும்பையும், ஒடிசாவை ஹரியானாவும், இமாசல பிரதேசத்தை மகாராஷ்டிராவும், ஜம்மு-காஷ்மீர் அணியை ஐதராபாத் அணியும், கேரளாவை திரிபுராவும், ராஜஸ்தானை மத்திய பிரதேசமும் விதர்பாவை பஞ்சாப் அணியும், சவுராஷ்டிராவை சர்வீசஸ் அணியும் வீழ்த்தியுள்ளது.

Similar News