செய்திகள்

3-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்

Published On 2017-02-24 07:10 GMT   |   Update On 2017-02-24 07:10 GMT
நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா மோதும் 3-வது ஒருநாள் போட்டி நாளை வெலிங்டன் மைதானத்தில் நடக்கிறது.

வெலிங்டன், பிப். 24-

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆடடத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன.

இரு அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி நாளை வெலிங்டன் நகரில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெறும். இத னால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். 2-வது ஆட்டத் தில் நியூசிலாந்திடம் தோற் றதற்கு பதிலடி கொடுக்க தென்ஆப்பிரிக்கா முயலும்.

Similar News