செய்திகள்

தேசிய போட்டியில் கலந்து கொள்ளாதது ஏன்?: நடைபந்தய வீராங்கனை குஷ்பிர் விளக்கம்

Published On 2017-02-20 03:36 GMT   |   Update On 2017-02-20 03:36 GMT
ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய நடைபந்தய போட்டிக்கான அணியில் இருந்து இந்திய வீராங்கனை குஷ்பிர் கவுர் நீக்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
புதுடெல்லி :

டெல்லியில் நடந்த தேசிய நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்காத இந்திய வீராங்கனை குஷ்பிர் கவுர், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய நடைபந்தய போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் 23 வயதான குஷ்பிர் கவுர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்

‘எனக்கு காய்ச்சலும் இல்லை. உடல் நலனும் பாதிக்கப்படவில்லை. ஆனால் பயிற்சியாளர் அலெக்சாண்டர் ஆர்ட்சிபாசெவ் தான், ‘இந்திய தடகள சம்மேளனத்தின் மூலம் நேரடியாக ஆசிய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்று வருகிறேன். எனவே தேசிய போட்டியில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

நாங்கள் அவரின் கீழ் பயிற்சி செய்கிறோம். நாங்கள் பயிற்சியாளர் சொல்வதை கேட்க வேண்டுமா? அல்லது தடகள சம்மேளனம் சொல்வதை கேட்க வேண்டுமா? தயவு செய்து நீங்களே (நிருபர்) சொல்லுங்கள். என் மீது எந்த தவறும் இல்லை. எனவே ஆசிய போட்டியில் பங்கேற்க தடகள சம்மேளனம் என்னை அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

Similar News