செய்திகள்

ஹாங்காங் தொடரில் விளையாட யூசுப் பதான் தடையில்லா சான்றிதழ் பெறவில்லை

Published On 2017-02-16 13:07 GMT   |   Update On 2017-02-16 13:07 GMT
ஹாங் காங் டி20 லீக் தொடரில் விளையாடுவதற்காக யூசுப் பதான் என்.ஓ.சி. பெறவில்லை என்று பி.சி.சி.ஐ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் அதிரடி வீரராக திகழ்ந்தவர் யூசுப் பதான். தற்போது இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் உள்ளது. கடந்த வருடம் டாக்கா லீக்கில் விளையாடுவதற்காக வங்காள தேசம் செல்ல பி.சி.சி.ஐ. என்.ஓ.சி. (தடையில்லா சான்றிதழ்) வழங்கியது. இதனால் அங்கு சென்று விளையாடினார்.

தற்போது ஹாங்காங் சென்று டி20 கிரிக்கெட் லீக்கில் விளையாட இருக்கிறார் என்று கடந்த வாரம் செய்தி வெளியானது. இதை யூசுப் பதான் உறுதிப்படுத்தினார்.

இதற்காக பி.சி.சி.ஐ.யிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் வெளிநாட்டு டி20 லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற இருக்கிறார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் யூசுப் பதானுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று பி.சி.சி.ஐ. தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் ஹாங்காங் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

ஹாங்காங் டி20 லீக் தொடர் மார்ச் 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

Similar News