செய்திகள்

மரபுசார் மின்சாரத்திற்கு மாறும் லார்ட்ஸ் மைதானம்

Published On 2017-02-16 04:33 GMT   |   Update On 2017-02-16 04:33 GMT
இங்கிலாந்தில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானமான லார்ட்ஸ், முழுவதுமாக மரபுசார் மின்சாரத்திற்கு மாற உள்ளது.
லண்டன்:

இங்கிலாந்து நாட்டின் லார்ட்ஸ் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானமானது உலகின் மிகப் பழமையான மைதானங்களில் ஒன்று. கிரிக்கெட் விளையாட்டின் ’மெக்கா’ என இம்மைதானம் அழைக்கப்படும். பருவ நிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் முயற்சியாக லார்ட்ஸ் கிரிக்கெட் சங்க புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.

அதன்படி இனி மைதானம் முழுவதும் மரபுசார் எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் மட்டுமே உபயோகப்படுத்தப்பட இருக்கிறது. மைதானம் முழுவதுமாக சோலார் தகடுகள் , சிறிய ரக காற்றாலை ஆகியவை பொருத்தப்பட்டு, அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் சுற்றுச் சூழலை பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல், மின்சார செலவையும் கணிசமாக குறைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் இங்கிலாந்தில் உள்ள அனைத்து மைதானங்களும் படிப்படியாக மரபுசார் எரிசக்திக்கு மாற்றப்படும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளன.

Similar News