செய்திகள்

ஐ.சி.சி கூட்டம்: கிரிக்கெட் வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Published On 2017-02-01 07:36 GMT   |   Update On 2017-02-01 07:36 GMT
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க 3 பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்தது.
புதுடெல்லி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கூட்டத்தில் பங்கேற்க 3 பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்தது.

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவினரே ஐ.சி.சி கூட்டத்தில் பங்கேற்க தகுதியானவர்கள், அவர்களை தான் அனுமதிக்க வேண்டும் என்று ஐ.சி.சி சேர்மன் சசாங்க் மனோகருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக லோதா குழு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வாரியத்தின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது ஐ.சி.சி விதிப்படி ஒருநாட்டு கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஒருவர் மட்டுமே பங்கேற்க முடியும்.

Similar News