செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் சானியா, போபண்ணா ஜோடிகள் வெற்றி

Published On 2017-01-21 12:34 GMT   |   Update On 2017-01-21 12:34 GMT
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா, போபண்ணா ஜோடிகள் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெற்று வருகிறது.

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டோடிக் உடன் இணைந்து ஜெர்மனியின் லாரா சியேகேமண்ட், குரோசியாவின் மேட் பாவிக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சானியா ஜோடி 7-5, 6-4 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - கனடாவின் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி ஜோடி நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ்- ஸ்லோவாகியாவின் கதேரினா ஸ்ரேபோட்னிக் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் ரோஹன் போபண்ணா ஜோடி 7-5, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சானியா மற்றும் போபண்ணா ஜோடிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Similar News