செய்திகள்

இரானி கோப்பை கிரிக்கெட்: சிராக் காந்தி சதத்தால் சரிவில் இருந்து மீண்டது குஜராத்

Published On 2017-01-21 03:37 GMT   |   Update On 2017-01-21 03:37 GMT
மும்பையில் நேற்று தொடங்கிய இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் (5 நாள் ஆட்டம்) சிராக் காந்தி நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
மும்பை :

ரஞ்சி சாம்பியன் குஜராத்-புஜாரா தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி (5 நாள் ஆட்டம்) மும்பையில் நேற்று தொடங்கியது.

‘டாஸ்’ ஜெயித்த குஜராத் அணி கேப்டன் பார்த்தீவ் பட்டேல் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி முதலில் ஆடிய குஜராத் அணி 82 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சிராக் காந்தி நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்துள்ளது. ‘கன்னி’ சதம் கண்ட சிராக் காந்தி 159 பந்துகளில் 18 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 136 ரன்னும், ஹர்திக் பட்டேல் 9 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ரெஸ்ட் ஆப் இந்தியா அணி தரப்பில் சித்தார்த் கவுல் 4 விக்கெட்டும், பங்கஜ்சிங் 3 விக்கெட்டும் சாய்த்தார்கள். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Similar News