செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ஆஸி. தொடரை வென்றது

Published On 2016-12-06 14:04 GMT   |   Update On 2016-12-06 14:04 GMT
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் கார்பெர்ராவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் வார்னர் (119), ஸ்மித் (72), ஹெட் (57), மார்ஷ் (76 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் குவித்தது.

பின்னர் 379 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி 47.2 ஓவரில் 262 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 116 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 எனக் கைப்பற்றியது. நியூசிலாந்து அணி சார்பில் கப்தில் 45 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 81 ரன்னும், நீசம் 74 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

Similar News